Friday, February 13, 2009

Fashion Movie 2008


ஒரு friend ரொம்ப insist பண்ணி DVD கூட கையில கொடுத்து படம் பாத்துட்டு என்னோட opinion சொல்ல சொன்னாங்க. சரி, நம்ப கருத்து எல்லாம் கூட கேக்குறாங்க பாத்துடுவோம் ன்னு முடிவு பண்ணிட்டேன்.

கொடுத்தவங்க மலையாளி, so கொஞ்சம் டவுட் ஆவே இருந்தது படம் முடியரப்போ ஒரு ரெண்டு , மூணு பேரை போட்டு தள்ளிடுவாங்களே ன்னு...
என் வீட்ல அவரு, ஹிந்தி படம் எல்லாம் பாக்க டைம் இல்லை வேலை இருக்குன்னு லேப்டாப் க்குள்ள ஒளிஞ்சுகிட்டார். ஒரு வழியா subtitle போட்டு பாத்தா, ஒரு ஊர்ல ஒரு அம்மா,அப்பா...அவங்களுக்கு ஒரு பொண்ணு ன்னு ரொம்ம்ப்ப சாதரணமா ஆரம்பிச்சது.

(என்னது பிரியங்கா சோப்ரா வா, வெயிட். வெயிட் -- வேலை எல்லாம் அப்புறம், பிரியங்கா சோப்ரா முக்கியம் ன்னு ஆத்துக்காரர் ஜொள்ளு விட வந்துட்டார்).

பெரிய model ஆ வரணும் , அது தான் என்னோட life ன்னு , சண்டிகர் ல இருந்து சண்டை போட்டுட்டு மும்பை வருது பொண்ணு. ஒரு gay designer friend ஹெல்ப் உடன் , ரொம்ப கஷ்ட பட்டு ஒரு வழியா சான்ஸ் வாங்கிடும்.

அப்போ ஷோஸ்டாப்பராக இருந்த கங்கனா ராவத் போதை,புகை, மது ன்னு எல்லாத்துக்கும் அடிமை.. ரொம்ப ஆணவம் வேற. அதனால் , அந்த showstopper இடம் பிரியங்கா கையில.


கங்கனா "வழ்த்துக்கள், ஆனா இந்த இடத்தில் இருக்க நீ நிறைய இழக்க வேண்டியிருக்கும்ன்னு" எச்சரிக்கை பண்றாங்க. அடுத்தவன் அட்வைஸ் பண்ணி என்னிக்கு கேட்டு இருக்கோம் நம்ப. அதுவும் சொன்னது எதிரி.

பிரியங்கா கங்கனா இருந்த அதே நிலைமைக்கு தள்ள படுறாங்க. அப்புறம் அப்பா,அம்மா சப்போர்ட் உடன் மீண்டும் show stopper ஆராங்க.

ஆனா, படம் எடுத்த விதம், அவ்வளோ real. வாவ் ! நிறைய புகழ்ந்னும்னு தோணுது. எப்படி சொல்லறது ன்னு தெரியலை. வெரி குட் movie.


1. கங்கனா தண்ணி அடிச்சுட்டு அந்த ramp ல நடக்குறப்போ அப்படி ஒரு style and acting.

2. படத்துக்கு back, front எல்லா bone மே பிரியங்கா தான். (Dostana movie பாத்து சரி கடுபுள்ள இருந்தேன், நம்பளை விட அவ்ளோ அழகா இவ, john abraham, அபிஷேக் பச்சன் , பாபி dheol எல்லாம் இவ பின்னாடி இப்படி சுத்துராங்குன்னு)..இந்த படம் பார்த்த அப்புறம் தான் அந்த கோவம் போச்சு :-)

படம் பாத்து அடுத்த நாள் கூட மேக்னா மாத்தூர் (பிரியங்கா) , சோனாலி (கங்கனா ராவத்) எல்லாம் மனுசுலேயே...


FYI:
1. டைரக்டர் மதுர் பண்டர்கர் - வீடியோ லைப்ரரி வச்சு இர்ருந்தாம் industry வர்றதுக்கு முன்.
2. இது கதை அல்ல நிஜம். lakme model ஓட கதையாம்.

வருத்தம்:
நம்ப தமிழ் படம் எல்லாம் எப்போ இந்த rangeக்கு வரும் ? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..hardcore கமல் ரசிகை. ஆனாலும் இந்த படம் பாத்துட்டு, ஒரு பெரிய ஏக்கம் வராம இல்லை..என்னத்தை சொல்ல.

பேஷன் படம் கொஞ்சம் பெரிய படம் மாதிரி இருக்கும் , ஆனாலும் கண்டிப்பா பாக்கலாம்.

http://www.fashionthemovie.net/

3 comments:

Ungalranga said...

மீ த பர்ஸ்ட்:..
அக்கா சூப்பரா..இல்லனாலும்...
நல்ல விமர்சனம் பண்ணீ இருக்கீங்க..
மிக்க மகிழ்ச்சி...
எப்படியோ பிரியங்கா மேல உள்ள கோவம் போச்சே .. அது போதும்..

(பி.கு)நானும் இந்த படத்தை பார்த்தாச்சு..

Viji Sundararajan said...

@ ரங்கன்

Thanks !

did you like the movie ?

Ungalranga said...

ம்ம்.. பிடிச்சுச்சு...
உங்க ஹஸ்பண்டு மாதிரி பிரியங்காவுக்காக (நல்ல ஆக்டர்)
பார்த்தது...
அவங்க ஆக்ட் சூப்பர்..க்கா..